விளையாட்டை முடிவு செய்வது பிக் பாஸா? ஜேசனா? - அடாவடி அன்சர் அதிரடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைக்கப்படும் போட்டியை முடிவு செய்வது ஜேசனா? என அடாவடி அன்சர் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைக்கப்படும் போட்டியை முடிவு செய்வது ஜேசனா? என அடாவடி அன்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணி தலைவராக அக்ஷிதா தேர்வாகியுள்ளார். எதிரணி தலைவராக முனியம்மா பொறுப்பேற்றுள்ளார்.
இந்த வாரம் முழுக்க உயிரைக் காக்கும் போட்டி பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இரண்டு பேர் சேர்ந்து ஒரு அணியாக மாற வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் 10 உயிர்கள் கொடுக்கப்படும். போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயிரை தற்காத்து விளையாட வேண்டும். இறுதிவரை யார் அதிக உயிர்களுடன் இருக்கின்றனரோ அவரே இந்த வார போட்டியின் வெற்றியாளர்.
Advertisement
Advertisement
இப்போட்டியில் அடாவடி அன்சர் - ஷாதிகா அணியாக உள்ளனர். ஜேசன் கெளசிக் - முகேஷ் அணியாக விளையாடுகின்றனர். இதுமட்டுமின்றி முனியம்மா - முத்தழகி, அக்ஷிதா - அவினாஷ், வாசன் - அஸ்மிதா என இருவர் சேர்ந்து ஒரு அணியாக விளையாடி வருகின்றனர்.
இதில் ஜேசன் - முகேஷ் அணியைத் தவிர மற்ற அனைத்து அணியிலும் ஒரு உயிராவது பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜேசன் அணியில் ஒரு உயிர் கூட பறிக்கப்படவில்லை. ஏனெனில் ஜேசனும் முகேஷும் வலுவான ஆட்டக்காரர்களாக இருப்பதால், அவர்களிடம் இருந்து ஒரு உயிரைக் கூட மற்ற அணியினரால் பறிக்க முடியவில்லை.
இதனை கவனித்த அன்சர், ஜேசன் அணியின் ஒரு உயிரையாவது பறித்து கணக்கை தொடக்கி வைக்கிறேன் என சபதம் எடுத்தார். அப்போது பேசிய அவர், பிக் பாஸ் விளையாட்டு முழுவதையும் ஜேசன் ஆக்கிரமித்துள்ளதைப்போன்று உணர்வதாகவும், இது நேர்மையானதாக இல்லை எனக் கூறினார்.
இந்தவீட்டில் விளையாட்டை முடிவு செய்ய வேண்டியது பிக் பாஸா? ஜேசனா? என கேள்வி எழுப்பினார். இதன்படி, ஜேசன் அணியின் 10 உயிர்களில் ஒரு உயிரை அடாவடி அன்சர் பறித்தார்.
ஜேசன் விளையாட்டில் யார் குறுக்கிட்டாலும் அவர்களை தீவிரமாக எதிர்ப்பவராக ஜேசன் உள்ளார். ஆனால், அன்சர் இதனைப் பற்றி கவலைப்படாமல் ஜேசனின் நம்பிக்கையை அசைத்துள்ளார். அன்சருக்கு ரசிகர்கள் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Bigg boss 10 tamil Is it Bigg Boss or Jason who decides the outcome of the competition Adavadi Ansar bold move.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.