FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சொகுசு கார் வாங்கிய நடிகை சான்வி மேக்னா!

புதிய கார் வாங்கிய சான்வி மேக்னா....

சான்வி மேக்னா
பகிர்:

நடிகை சான்வி மேக்னா தன் முதல் காரை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குடும்பஸ்தன் திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சான்வி மேக்னா. அப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து டக் டக், பியார் பிரேம கல்யாணம் திரைப்படங்களில் நடித்தார்.

நடனத்தில் திறமை கொண்ட இவர் அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாவில் ரீல்ஸ்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். சாய் அபயங்கரின் விழி வீக்குறா ஆல்பம் பாடலில் நடித்து கவனம் பெற்றார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழ், தெலுங்கில் நடித்துவரும் சான்வி மேக்னா புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார்.

இதனைப் பகிர்ந்த சான்வி, “என் முதல் காரை வாங்கியுள்ளேன். இது சிறப்பான உணர்வைக் கொடுப்பதாக நினைக்கிறேன். என் குடும்பத்தினரின் சிரிப்பையும் கொண்டாட்டத்தையும் பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress saanve megghana has announced that she has purchased her first car.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.