அடுத்தடுத்து நாயகனாக ஒப்பந்தமாகும் ரிஷிகாந்த்!
நடிகர் ரிஷிகாந்த் அதிகம் கவனிக்கப்படும் நடிகராகியுள்ளார்...
நடிகர் ரிஷிகாந்த்க்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவந்த ரிஷிகாந்த்க்கு தற்போது பெரிய வெளிச்சமும் கிடைத்ததுடன் ஏகப்பட்ட ரசிகர்களும் உருவாகியுள்ளனர்.
Advertisement
Advertisement
மொத ராத்திரி, டோரதி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பெரிதாகக் கவனிக்கப்பட்ட ரிஷிகாந்த் அடுத்ததாக தெலுங்கில் நடிகர் ராம் சரணுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், அடுத்தடுத்து நிறைய தயாரிப்பாளர்கள் நடிகர் ரிஷிகாந்த்தை அணுகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கென் கருணாஸின் யூத் திரைப்படத்தைத் தயாரித்த பார்வதா நிறுவனம் ரிஷிகாந்த் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபோக, மேலும் சில திரைப்படங்களில் நாயகனாக நடிக்க ரிஷிகாந்த் ஒப்பந்தமாகியுள்ளாராம். இவருக்குப் பெண் ரசிகைகள் அதிகரித்திருப்பதால் காதல் திரைப்படங்களிலும் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.