கூடுதலாக 200 காட்சிகள்... சுயாதீன படத்தை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி!
தேசிய விருது வென்ற பாலிவுட் இயக்குநர் வினோத் கப்ரி பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி குறித்து...
தேசிய விருது வென்ற பாலிவுட் இயக்குநர் வினோத் கப்ரி தனது பைர் திரைப்பயம் நாளை (நவ.13) முதல் கூடுதலாக 200 காட்சிகள் திரையிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்.
செகந்திராபாதில் பிறந்த வினோத் கப்ரி இயக்கிய பைர் என்ற படம் கடந்த அக்.30ஆம் தேதி வெளியானது. தொடக்கத்தில் 80 காட்சிகளாக வெளியாகி, பின்னர் ரசிகர்களின் வரவேற்பினால் மூன்று நான்கு நாள்களில் 400 திரைகளாக அதிகரித்தன.
Advertisement
Advertisement
ராமாயணா படத்தின் வெளியீட்டினால் கடைசி இரண்டு நாள்களில் இந்தப் படத்தின் 75 சதவிகித காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதற்காக அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் தங்களது ஆதரவை இயக்குநருக்குத் தெரிவித்திருந்தது. மேலும் மத்திய அமைச்சரிடம் இது குறித்து புகாரையும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கூடுதல் 200 காட்சிகள் நாளை முதல் திரையிடப்படுமென இயக்குநர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நவ.13, வெள்ளிக்கிழமை முதல் பைர் படத்துக்கு கூடுதலாக 200 காட்சிகள். மூன்றாவது வாரத்தில் பைர் செல்கிறது. அம்மா மற்றும் பாபு அதிகமான திரைகளில் வரவிருக்கிறார்கள்.
கொல்கத்தா, ஜெய்பூர், ஹைதராபாத், இந்தூர், போபால், லூதியானா, அம்பாலா, பரேலியில் மீண்டும் திரையிடப்படுகிறது. ஹல்திவானி, தில்லி என்சிஆர், மும்பை, புனே, பெங்களூரு, லக்னௌவில் கூடுதல் திரைகளில் வெளியாகிறது.
சிறிய சுயாதீன படத்தை உயிர்ப்புடன் வைக்கும் இந்திய மக்களுக்கு நன்றி. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.