FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே முன்பதிவு! இந்தியாவில் 24 மணிநேரத்தில் ரூ. 10 கோடிக்கு டிக்கெட் விற்பனை

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் டிக்கெட் விற்பனை குறித்து...

27 வினாடிகள் முன்பு
அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே முன்பதிவு...
பகிர்:

மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகள் வெளியான 24 மணிநேரத்திலேயே ரூ. 10 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அவெஞ்சர்: டூம்ஸ்டே, வருகிற டிசம்பர் 18 ஆம் தேதியில் வெளியாகவிருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் மட்டும் ஒருநள் முன்னதாகவே டிசம்பர் 17-ல் வெளியாகிறது.

முந்தைய அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்த கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா), கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் (தார்), டாம் ஹிட்டில்ஸ்டன் (லோகி), பால் ரூட் (ஆன்ட்மேன்), பெனடிக்ட் கம்பர்பேட்ச் (டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்), செபாஸ்டின் ஸ்டான் (பகி), ஆண்டனி மேக்கி (ஃபால்கன்), பால் பெட்டனி (விசன்) உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தில் அயர்ன்மேன் பாத்திரம் உயிரிழந்ததால், டூம்ஸ்டே படத்தில் அயர்ன்மேன் பாத்திரம் இருக்காது. இருப்பினும், அயர்ன்மேன் பாத்திரத்தில் நடித்த ராபர்ட் டோனி ஜூனியர், இந்தப் படத்தில் டாக்டர் டூம்ஸ்டே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், இந்தியாவில் 30 நாள்களுக்கு முன்பாகவே படத்தின் முன்பதிவு தொடங்கியது. மேலும், படத்தின் முன்பதிவு தொடங்கிய 24 மணிநேரத்திலேயே ரூ. 10 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை (டிச. 17 - 12 மணி) நள்ளிரவு தொடங்கிய முன்பதிவு அடுத்த நாள் புதன்கிழமை (டிச. 18) காலை வரையில் ரூ. 15 கோடியை எட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி, மும்பை முதலான நகரங்களில் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் டிக்கெட்டுகள் ரூ. 2,500 முதல் ரூ. 3,000 வரையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதிகப்படியான விலையாலேயே முன்பதிவில் ரூ. 10 கோடியை எட்டியதாகவும் கூறப்படுகிறது.

summary

Avengers Doomsday India advance booking crosses ₹10 crore in just 24 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.