முகப்பு

கதை நாயகியாக நடிக்கும் ஷ்ருதி ஹாசன்!

முன்னணி நாயகியாக ஷ்ருதி ஹாசன் நடிக்கிறார்...

15 வினாடிகள் முன்பு
கதை நாயகியாக நடிக்கும் ஷ்ருதி ஹாசன்!
பகிர்:

நடிகை ஷ்ருதி ஹாசன் நடிப்பில் புதிய தமிழ்ப்படம் உருவாகிறது.

ஷ்ருதி ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ஷ்ருதிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது, நடிகர் துல்கர் சல்மானுடன் ஷ்ருதி நடித்த, ’ஆகாஷம் லோ ஒக்க தாரா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்ததாக அஸ்வின்ஸ் திரைப்படத்தை இயக்கிய தருண் தேஜா இயக்கத்தில் ஷ்ருதி நடிக்க உள்ளார்.

Advertisement

Advertisement

இதனை மாவீரன், 3 பிஎச்கே உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகும் எனத் தெரிகிறது.

A new Tamil film starring actress Shruti Haasan is in the making.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.