முகப்பு

தெரிந்துதான் பேசுகிறாரா? வெற்றி மாறனை விளாசும் ரசிகர்கள்!

இயக்குநர் வெற்றி மாறன் பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது...

4 வினாடிகள் முன்பு
தெரிந்துதான் பேசுகிறாரா? வெற்றி மாறனை விளாசும் ரசிகர்கள்!
வெற்றி மாறன்.
பகிர்:

இயக்குநர் வெற்றி மாறன் பேசியது விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

இயக்குநர் வெற்றி மாறன் விடுதலை திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர்கள் சிலம்பரசன், பிரியங்கா மோகன், விஜய் சேதுபதியை வைத்து அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது, வடசென்னை திரைப்படத்துடன் தொடர்புடைய கதையாக உருவாவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேநேரம், அரசன் கிளிம்ஸ் விடியோ ஒன்று தீபாவளியை முன்னிட்டு வெளியானது. ஆனால், அதில் இடம்பெற்ற பின்னணி இசையும் பாடல் வரிகளும் வெற்றி மாறன் வன்முறையை அழகியலாகக் காட்டுகிறேன் என சமூகத்தைத் தவறாக வழிநடத்துகிறார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட வெற்றி மாறன், “எல்லாரும் என் திரைப்படங்களில் லிப் சிங்க் (உதட்டின் அசைகளுக்கும் வசனத்திற்குமான தொடர்பு) குறித்து கேட்கிறார்கள். என் குழுவினரிடம் நான் சொல்வது இதுதான்; எனக்கு கதைதான் முக்கியம். லிப் சிங்க் அல்ல. உங்களுக்கு அதுதான் முக்கியம் என்றால் நீங்கள் அதனை மட்டும் பாருங்கள்” என்றார்.

வெற்றி மாறனின் திரைப்படங்களில் அடிக்கடி இந்த லிப் சிங்க் பிரச்னை வருதுண்டு. பலமுறை விமர்சனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெற்றி மாறனின் இக்கருத்தைக் கேட்ட ரசிகர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு திரைப்படம் என்பது எல்லா துறைகளின் கூட்டுழைப்புதான்; கதையைச் சொல்கிறேன் என தொழில்நுட்ப ரீதியாக சரியாகக் காட்டத் தேவையில்லை என்பது போல் இவர் பேசுவதை ஏற்க முடியாது என சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், தன் இசையமைப்பாளர்களிடம் உங்களுக்குத் தெரிந்ததை வாசித்துக்கொடுங்கள்; கதை இருக்கிறது இசையை யார் கவனிக்கப் போகிறார்கள்? என வெற்றி மாறனால் கேட்க முடியுமா? என்றும் கேள்வியெழுப்புகின்றனர்.

Director Vetrimaaran's remarks are drawing criticism.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.