த்ரிஷ்யம் பாணி... ஓடிடியில் விமர்சனங்களைச் சந்திக்கும் பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார்!
பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் ஓடிடி வெளியீடு குறித்து...

நடிகை பார்வதி திருவோத்து நடித்த பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
இயக்குநர் ஷகத் இயக்கத்தில் நடிகர்கள் பார்வதி திருவோத்து, சித்தார்த் பரதன், மாத்யூ தாமஸ், உண்ணி மாயா உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார்.
காவல் நிலையத்தில் காவல்துறையினரால் எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றதுடன் விமர்சன ரீதியாகவும் நல்ல கருத்துகளைப் பெற்றது. மேலும், திரையரங்க வெளியீட்டில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஓடிடியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. முக்கியமாக, இப்படம் த்ரிஷ்யம் பாணியில் அதே போன்று திருப்புமுனைகள் கொண்ட திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும், ரசிகர்களை ஏமாற்றுவதற்காகவே சில லாஜிக்குகள் மீறப்பட்டுள்ளன என்றும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.
ஓடிடி விமர்சனங்களுக்குப் பதிலளித்த இயக்குநர் ஷகத், “ஓடிடி தளத்தில் இப்படம் வெளியான பின்பு பார்வையாளர்களிடமிருந்து இத்தகைய எதிர்வினை வரும் என்பதை நான் எதிர்பார்த்திருந்தேன். ஒரு இயக்குநராக, நான் சில சுதந்திரங்களை எடுத்துக்கொண்டு ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் என்பது உண்மைதான். இப்படம் ஒரு ஆவணப்படமோ அல்லது முழுமையாக நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதோ அல்ல. இது இன்னும் சுவாரஸ்யமாக அமைவதற்காகவே நாங்கள் அத்தகைய சுதந்திரங்களைச் சேர்த்துக்கொண்டோம்.” எனத் தெரிவித்துள்ளார்.