FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழில் வெளியாகும் பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார்!

பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் தமிழில் திரைக்கு வருகிறது....

20 அக்டோபர் 2026, 3:31 pm IST
பகிர்:

நடிகை பார்வதி திருவோத்து நடித்த பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷகத் இயக்கத்தில் நடிகர்கள் பார்வதி திருவோத்து, சித்தார்த் பரதன், மாத்யூ தாமஸ், உண்ணி மாயா உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார்.

காவல் நிலையத்தில் காவல்துறையினரால் எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றதுடன் விமர்சன ரீதியாகவும் நல்ல கருத்துகளைப் பெற்றது. மேலும், திரையரங்க வெளியீட்டில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

Advertisement

Advertisement

ஆனால், ஓடிடியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழில் பிடிகே என்கிற பெயரில் இப்படத்தை டப்பிங் செய்துள்ளனர். இது, வருகிற அக். 23 ஆம் தேதி தமிழகத் திரைகளில் வெளியாகவுள்ளது. தமிழக வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

The film Prathama Drishthiya Kuttakkar, starring actress Parvathy Thiruvothu, has been dubbed in Tamil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments