FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

என் முதல் திரைப்படத்தை இயக்கத் தயாராக உள்ளேன்: பார்வதி திருவோத்து

பார்வதி திருவோத்து இயக்குநராகும் முயற்சியில் உள்ளார்...

37 வினாடிகள் முன்பு
பார்வதி திருவோத்து
பகிர்:

நடிகை பார்வதி திருவோத்து தன் முதல் திரைப்படத்தை இயக்கக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாள சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை பார்வதி திருவோத்து. பூ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி மரியானில் அசத்தலான நடிப்பைக் கொடுத்து மேலும் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, உத்தம வில்லனில் நடித்தார்.

பின், தமிழ் சினிமாவிலிருந்து இடைவேளை எடுத்துக்கொண்டவர் நடிகர் விக்ரமுடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தார். அதே போல், மலையாளத்தில் பல வெற்றிப்படங்களில் நடித்து ஏகப்பட்ட விருதுகளைத் தன் நடிப்பிற்காகப் பெற்றார். இறுதியாக, ஐ நோபடி என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை பார்வதி திருவோத்து, “நமக்கு நடிக்கக் கிடைக்கும் கதாபாத்திரங்களுக்கு சில வரம்புகள் இருக்கின்றன. அதனால், இயக்குநராக கற்பனை மற்றும் படைப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன். இதற்காக, நான் கடந்த 5 ஆண்டுகளாக என் முதல் திரைப்படத்தை இயக்க காத்திருக்கிறேன். படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. சரியான தயாரிப்பாளர் அமைந்ததும் படப்பிடிப்பைத் ஆரம்பிக்கலாம் என்கிற நம்பிக்கையில் உள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Parvathy Thiruvothu has stated that she is waiting to direct her first film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments