FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நான் நடிகையாவேன் என நினைக்கவில்லை! எதிர்நீச்சல் பார்வதி நெகிழ்ச்சி!

எதிநீச்சல் வாய்ப்பு கிடைத்த விதம் குறித்து நடிகை பார்வதி பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல்கள்...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 4:15 pm IST
நடிகை பார்வதி - இன்ஸ்டாகிராம்
பகிர்:

தான் நடிகையாவேன் என நினைக்கவில்லை என எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

தொகுப்பாளராக இருந்தபோது வந்த வாய்ப்புகளை தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும், தேவையானி உடன் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்புக்கு வேறு வழியின்றி சம்மதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்நீச்சல் -2 தொடரில் நடிகை பார்வதி நாயகியாக நடித்து வருகிறார். எதிர்நீச்சல் முதல் பாகத்தில் ஜனனி பாத்திரத்தில் மதுமிதா நடித்துவந்த நிலையில், தற்போது பார்வதி நாயகியாக நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இதனிடையே தொகுப்பாளராக இருந்து நடிகையானது குறித்தும் எதிர்நீச்சல் வாய்ப்பு குறித்தும் பார்வதி பேசியதாவது:

''என் ஆரம்பகாலகட்டத்தில் தொகுப்பாளர் ஆவேன் என்றும் நினைக்கவில்லை. நான் நடிகையாவேன் என்று கூட நினைக்கவில்லை.

தொகுப்பாளராக இருக்கும்போதே அதில் பெரிய நிகழ்ச்சிகளுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால், நான் அனுபவம் குறைவாக கொண்டிருந்ததால் அதனை நிராகரித்து வந்தேன். எனக்குள் நம்பிக்கை வந்த பிறகே பல பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன்.

அப்படி ஒரு வாய்ப்புக்கு என்னால் மறுப்பு கூறவே முடியவில்லை. அதுதான் தேவையானி உடன் நடிக்கும் வாய்ப்பு. ஒரு தொடரில் தேவையானிக்கு மருமகளாக நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு வந்தது.

ஆரம்பத்தில் எனக்குள் பல கேள்விகள் இருந்தது. தேவையானி போன்ற பெரிய நடிகையுடன் திரையைப் பகிர்ந்துகொள்ள என்னைப்போன்ற புதுமுகத்தை யாராவது தேர்வு செய்வார்களா? என பல கேள்விகள் இருந்தது.

ஆனால், நம்பவே முடியாத வகையில் அதிசயம் நடந்தது. ஆடிஷன் கூட போகாமல் நேரடியாக டெஸ்ட் சூட் சென்றோம். அப்படிதான் புதுப்புது அர்த்தங்கள் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு வாரத்திற்கு பிறகுதான் நான் இத்தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறேன் என்பதே தெரியும்'' எனக் குறிப்பிட்டார்.

எதிர்நீச்சல் வாய்ப்பு

''எதிர்நீச்சல் தொடரில் ஏதே சிறிய பாத்திரத்திற்கு கேட்கிறார்கள் என நினைத்தேன், பிறகுதான் நாயகியாக நடிக்க வேண்டும் எனக் கேட்டனர். அது அதிர்ச்சியாக இருந்தது.

ஏனெனில் எதிர்நீச்சலின் முதன்மை பாத்திரத்தில் நடித்துவந்த மதுமிதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். புரோமோவில் ஒரு முதன்மை பாத்திரம் மாற்றும்போது பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ஆரம்பத்தில் இருந்த அந்த எதிர்ப்பு சிறிது காலம் செல்ல செல்ல மாறியது. வலுவான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வழங்கியதன் பிறகே பலரும் என்னை ஏற்றுக்கொண்டனர்.

எதிர்நீச்சல் தொடருக்கு பிறகு ஜனனியாகவே என்னை பார்க்கின்றனர். கதாபாத்திரமாகவே என் அம்மா என்னை நினைத்து அவ்வபோது அழுகிறார். என்னைப் பார்க்கும் பலரும் ஜனனியாகவே என்னை நினைத்து பேசுகின்றனர். அது மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஏதோ உருப்படியாக வேலை செய்கிறேன் என்ற திருப்தி கிடைக்கிறது'' என பார்வதி குறிப்பிட்டார்.

summary

I never thought I would become an actress EthirNeechal Parvathi gets emotional

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments