FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மீண்டும் இணையும் நடிகை ஸ்ருதி - தீபக்! உருவாகிறது தென்றல் -2

தென்றல் தொடரின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது குறித்து...

9 செப்டம்பர் 2026, 4:24 pm IST
தீபக் - ஸ்ருதி - இன்ஸ்டாகிராம்
பகிர்:

தென்றல் தொடரின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ருதி ராஜ் - தீபக் தினகரன் இணைந்து நடித்து புகழ் பெற்ற தொடர் தென்றல்.

சன் தொலைக்காட்சியில் 2009 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான இத்தொடர் 2015 வரை 6 ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பானது. துளசி பாத்திரத்தில் நடிகை ஸ்ருதி நடித்திருந்தார். எதார்த்தமான குடும்பத் தலைவியாக பலரின் மனம் கவர்ந்த நடிகையாக ஸ்ருதி மாறினார்.

Advertisement

Advertisement

இதுமட்டுமின்றி நடிகை ஹேமலதா, சுசேன் ஜார்ஜ், சுபாலேகா சுதாகர், சாதனா, சுதா சந்திரன், நீலிமா ராணி, நிழல்கள் ரவி, ஐஸ்வரியா உள்ளிட்ட துணை பாத்திரங்களின் நடிப்பும் தென்றல் தொடருக்கு வலுசேர்க்கும் வகையில் இருந்தது.

திருமணத்துக்குப் பிறகு கல்லூரிக்குச் சென்று படித்து பட்டம் பெறும் நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணை மையப்படுத்தி தென்றல் தொடர் எடுக்கப்பட்டது. குரு சம்பத்குமார் திரைக்கதை எழுத இயக்குநர் குமரன் இத்தொடரை இயக்கியிருந்தார்.

இதனிடையே ஸ்ருதி - தீபக் நடிப்பில் மீண்டும் தென்றல் -2 தொடர் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தீபக் மீண்டும் புதிய தொடரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Actress Shruti and Deepak to reunite 'Thendral-2' serial is in the making

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments