ராமாயணா!! அமித் ஷா உடன் சாய் பல்லவி, ரன்பீர் கபூர் சந்திப்பு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ராமாயணா படக்குழு நேரில் சந்தித்துள்ளது குறித்து...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ராமாயணா திரைப்பட நடிகர்கள் சாய் பல்லவி, ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா முதல் பாகம் கடந்த நவ.5ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், நடிகர் யஷ் ராவணனாகவும், நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர்.
சிறப்பான கிராஃபிக்ஸ் காட்சிகளால் ஆஸ்கர் போட்டிக்குத் தேர்வாகியுள்ள இந்தப் படம், ரூ. 1,700 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்ற “ராமாயணா” படத்தின் இயக்குநர் நிதீஷ் திவாரி, நடிகர்கள் சாய் பல்லவி, ரன்பீர் கபூர் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று (நவ. 26) நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர்கள் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள ராமாயணா திரைப்படங்களின் இரண்டாம் பாகம் வரும் 2027 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.