பாக்கெட் நாவலில் சிறப்பு நடனமாடிய வாமிகா கபி!
பாக்கெட் நாவலில் வாமிகா கபி....

நடிகை வாமிகா கபி பாக்கெட் நாவல் திரைப்படத்தில் சிறப்பு நடனமாடியுள்ளார்.
இயக்குநர் தியாகராஜன் குமாராஜா இயக்கிவரும் பாக்கெட் நாவல் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி.ஷெட்டி, கிஷோர் குமார், திலீப் சுப்பராயன் நடித்துள்ளனர்.
டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.முதலில் இளையராஜா ஒப்பந்தமாகி பின் விலகிக்கொண்டார்.
Advertisement
Advertisement
இப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜன.14 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ஆசை அத்தான் டிச. 1 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இப்பாடலில் நடிகை வாமிகா கபி சிறப்பு நடனமாடியுள்ளதை விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். டிசி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற வாமிகா இதில் நடனமாடியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.