மணிகண்டன் நடிக்கும் மக்கள் காவலன்: டிரைலர் ப்ரோமோ வெளியீடு!
மணிகண்டன் நடிக்கும் மக்கள் காவலன் படத்தின் டிரைலர் ப்ரோமோ வெளியானது பற்றி...

மணிகண்டன் நடிக்கும் மக்கள் காவலன் படத்தின் டிரைலர் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நடிகர் மணிகண்டன் அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் ’மக்கள் காவலன்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
Advertisement
Advertisement
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.
மணிகண்டன் இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். காவல்துறை மற்றும் சாதி அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் இன்னும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இப்படத்தின் டிரைலர் நவ. 30 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் டிரைலர் ப்ரோமோ இன்று வெளியானது.
இப்படம், டிச. 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.