திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு! - டோரதிக்கு விஜய் ஆண்டனி பாராட்டு!
டோரதி திரைப்படத்தைப் பாராட்டிய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படத்தை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பாராட்டியுள்ளார்.
நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோரின் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய புதிய படம் “டோரதி”. இப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், துணிச்சலான கதைகளத்தால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், டோரதி திரைப்படம், திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு எனக் கூறி நடிகர் விஜய் ஆண்டனி இன்று (அக். 01) தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“டோரதி மிக மிக சிறப்பான படம். திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு . இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!” எனக் கூறியுள்ளார்.
Actor and music composer Vijay Antony has praised director Karthik Subbaraj's film "Dorothy".
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.