FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வைரம் திருட்டை சுவாரசியமாக்கிய டிடிஎஃப் வாசன்! போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைரம் திருடும் போட்டி வைக்கப்பட்ட மறுநாளே வைரத்தை டிடிஎஃப் வாசன் சாமர்த்தியமாகத் திருடியது குறித்து...

14 அக்டோபர் 2026, 5:34 pm IST
டிடிஎஃப் வாசன் - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைரம் திருடும் போட்டி வைக்கப்பட்ட மறுநாளே வைரத்தை டிடிஎஃப் வாசன் சாமர்த்தியமாகத் திருடியுள்ளார்.

பிக் பாஸ் விளையாட்டு புரியவில்லை என பலர் கடந்த வாரம் முழுக்க டிடிஎஃப் வாசனை விமரித்து வந்த நிலையில், இந்த வாரம் முழுக்க விளையாட வேண்டிய ஆட்டத்தை இரண்டாவது நாளிலேயே முடித்து வைத்துள்ளார்.

பிக் பாஸ் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வைரத்தை திருடி யாரும் சந்தேகப்பட முடியாத இடத்தில் வைத்துவிட்டதால், இந்த வாரத்தில் இனி வரும் நாள்களெல்லாம் வைரத்தை தேடுவதே போட்டியாக இருக்கப்போகிறது.

Advertisement

Advertisement

சேர்ந்து வைரத்தை திருடி வைத்துள்ள டிடிஎஃப் வாசனும் போட்டியாளர்களுடன் சேர்ந்து வைரத்தைத் தேடுகிறார். இதனால், இந்த வாரத்துக்கான் போட்டியில் சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கடந்த வாரம் டிடிஎஃப் வாசன், நடிகை அக்‌ஷிதா மற்றும் காமன்மேன் போட்டியாளர் கரீஷ்மா ஆகியோர் உள்ளே நுழைந்தனர்.

இதில் அக்‌ஷிதா முதல் வாரத்திலேயே வீட்டின் ஆளும் அணித் தலைவியானார். கரீஷ்மாவும் காமன்மேன் போட்டியாளர் என்பதால், வலுவான ஆட்டக்காரராகவே கருதப்படுகிறார்.

ஆனால், டிடிஎஃப் வாசனுக்கு பிக் பாஸ் ஆட்டமே புரியவில்லை என அனைத்து போட்டியாளர்களுமே விமர்சித்து வந்தனர். இதனால் மனமுடைந்த டிடிஎஃப் வாசன், இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

summary

Bigg boss 10 tamil TTF Vasan turns the diamond theft into an intriguing affair shock for competitors

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments