லியோ படத்தை விடவும் குறைவாக வசூலித்த ஜெயிலர் 2!
முதல் நாள் வசூலில் லியோ, கூலி திரைப்படங்களை விடவும் குறைவாக வசூலித்த ஜெயிலர் 2 குறித்து...
நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாள் வசூலில் விஜய்யின் லியோ, மற்றும் ரஜினியின் கூலியை படங்களை விடவும் குறைவாக வசூலித்துள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று (அக்.15) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.125.25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டுமே ரூ.70.25 கோடி வசூலித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
Advertisement
Advertisement
முன்னதாக ரஜினியின் கூலி திரைப்படம் முதல் நாளில் ரூ. 151. 10 கோடி வசூலித்துள்ளது. விஜய்யின் லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ. 142 கோடி வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் படங்களில் முதல் நாளில் அதிகமாக வசூலித்த மூன்றாவது மிகப்பெரிய படமாக ஜெயிலர் 2 உருவாகியுள்ளது. ரசிகர்களின் அமோக வரவேற்பினால் அதிக வசூல் ஈட்டிய தமிழ்ப் படமாக ஜெயிலர் 2 மாறுமெனவும் கூறப்படுகிறது.
தமிழில் ரூ.43 கோடியும் தெலுங்கில் ரூ.12 கோடியும் ஹிந்தியில் ரூ.3.5 கோடியும் கன்னடத்தில் ரூ.0.30 கோடியும் மட்டுமே வசூலித்துள்ளது.
லியோ மற்றும் கூலி திரைப்படம் முறையே ரூ.600 கோடி, ரூ. 500 கோடி வசூலித்தன. ஜெயிலர் முதல் பாகம் ரூ.600 கோடி வசூலித்தன. ஜெயிலர் 2 இவைகளை தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Jailer 2 box office Day 1: Rajinikanth film roars, but Coolie and Leo stay ahead
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.