FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மார்பு, தோள்பட்டையில் காயம்!

துப்பாக்கிச்சூட்டில் காயங்களுடன் உயிர் தப்பிய டைகர் ஷ்ராஃப் சிகிச்சைப் பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது குறித்து...

19 அக்டோபர் 2026, 9:53 am IST
கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் / சிகிச்சையில் டைகர் ஷ்ராஃப் - எக்ஸ்
பகிர்:

பாலிவுட் நடிகை டைகர் ஷ்ராஃப் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், காயங்களுடன் உயிர்த்தப்பிய டைகர் ஷ்ராஃப் சிகிச்சைப் பெறும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பாலிவுட் டைகர் ஷ்ராஃப், மும்பை ஜூஹூவில் உள்ள புஷ்பா பூங்காவில் கால்பந்து விளையாடிவிட்டு காரில் திரும்பும்போது இருசக்கர வாகனத்தில் காத்திருந்த 3 பேர் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தச் சம்பவத்தில் டைகர் ஷ்ராஃப்புக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அவரின் 2 உதவியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

இச்சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக டைகர் ஷராஃப் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு மார்பு மற்றும் வலது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. கைகளிலும் கட்டு போடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் டைகர் ஷ்ராஃப் மீதான தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

இது தொடர்பாக பகிரப்பட்டு வரும் பதிவில், ''டைகர் ஷஅனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சாந்து ஆகிய நாங்கள் முழுப் பொறுப்பேற்கிறோம். தொலைபேசி வாயிலாக அவரிடம் விஷயத்தை விளக்க முயன்றோம். ஆனால் அவர் புரிந்துகொள்ளவில்லை. எனவே, இன்று அவருக்கு நன்றாகப் புரியும் வகையில் செய்துகாட்டினோம். மும்பை திரையுலகில் எங்கள் பேச்சைக் கேட்க மறுத்து சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றத் துணிபவர்கள் எங்களின் அடுத்த இலக்காக இருப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

summary

First image of Tiger Shroff firing accused emerges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments