இவர் யாரென்று தெரிகிறதா? தாமிரபரணி பானு!
தாமிரபரணி படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்த பானு நடிகை பற்றி..
தமிழ்த் திரைப்படங்களில் ஹிட் கொடுத்த படம் தாமிரபரணி. இதில் நாயகியாக நடித்தவர் பானு. முக்தா என்ற பெயருடைய இவர், பானு என்ற பெயரில் திரைப்படங்களில் அறிமுகமானார்.
2007ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான தாமிரபரணி படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக மிகவும் துடிப்பான நாயகியாக அறிமுகமாகியிருந்தார்.
தமிழ்த் திரையுலகில் இவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே அப்போது கூறப்பட்டது. ஆனால் தமிழில் இவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால், தமிழ்த் திரையுலகில் இருந்து ஒதுங்கினார்.
Advertisement
Advertisement
மலையாள திரைப்படங்களில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். கேரளத்தில் பிரபலமான ரிமி டோமியின் அண்ணன் ரிங்கு டோமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கேரளத்தில் தன்னுடைய கணவருடன் வாழ்ந்து வருகிறார் பானு.
தமிழில், சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர், மூன்று பேர் மூன்று காதல், தேசிங்கு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இவர், மலையாளம், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
அண்மையில் ஓணம் கொண்டாடி இவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அட இவர் நம்ம பானு ல என்று தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.