திருமண பந்தத்தில் இணைந்த சின்ன திரை பிரபலம்!
சின்ன திரை நடிகர் கிரிஷ் - சஜிதா திருமணம் குறித்து...
ரஞ்சனி தொடர் பிரபலம் கிரிஷ் மற்றும் சஜிதாவிற்கு நேற்று(ஆக. 31) திருமணம் நடைபெற்றது.
ஆண் - பெண் நட்பை மையப்படுத்தியும் இளம் ரசிகர்களைக் கவரும் வகையிலும் எடுக்கப்பட்டு வந்த தொடர் ரஞ்சனி. இந்தத் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கிரிஷ்.
இவர் விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான தனம் தொடரில், கதிரேசன் என்ற பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் தொடரில் கிரிஷின் எதார்த்தமான நடிப்பு, அவருக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.
Advertisement
Advertisement
சின்ன திரை மட்டுமின்றி, பெரிய திரையில் மெய்யழகன் மற்றும் அன்னபூரணி ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் கிரிஷ், தனது நீண்ட நாள் காதலியான பிரபல சமையல் கலைஞர் சஜிதாவை நேற்று கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் உற்றார் உறவினர் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இவர்களது திருமணப் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் கிரிஷ் - சஜிதா ஜோடிக்கு சினிமா, சின்ன திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Actor Krish and Sajitha, known for the serial Ranjani, got married yesterday (August 31).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.