நடிகர் கார்த்தியை இயக்கும் சுந்தர். சி!
நடிகர் கார்த்தியின் புதிய திரைப்படம் குறித்து...
இயக்குநர் சுந்தர். சி நடிகர் கார்த்தி கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது.
வா வாத்தியார் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி சர்தார் - 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப். 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் டீசர், டிரைலர் காட்சிகள் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையே, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது பெரிய பட்ஜெட்டில் பீரியட் திரைப்படமாக உருவாகி வருகிறது.
Advertisement
Advertisement
மேலும், நடிகர் கார்த்தி தன் 30-வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். மேட் (mad) திரைப்பட பாகங்களை இயக்கிய கல்யாண் சுந்தர் இப்படத்தை இயக்க, நாயகியாக மீனாக்ஷி சௌத்ரி நடிக்கிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். இந்த நிலையில், இயக்குநர் சுந்தர். சி நடிகர் கார்த்தியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். இப்படம் முழு கமர்சியல் நகைச்சுவை படமாக உருவாகும் எனத் தெரிகிறது.
A new film is being made featuring the collaboration of director Sundar C. and actor Karthi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.