FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஃபேன்டஸி படத்தை இயக்கும் சுந்தர். சி?

இயக்குநர் சுந்தர். சி புதிதாக ஃபேன்டஸி திரைப்படத்தை இயக்கவுள்ளது குறித்து...

இயக்குநர் சுந்தர். சி - கோப்புப் படம்
பகிர்:

இயக்குநர் சுந்தர். சி அடுத்ததாக ஃபேன்டஸி திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார்.

காமெடி கலந்த திரைக்கதை உருவாக்குவதில் வல்லவரான சுந்தர் சி, அரண்மனை படத்தின் 4 பாகங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றி கண்டார்.

இதனைத் தொடர்ந்து ஃபேன்டஸி திரைப்படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும், மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

2020ம் ஆண்டில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா உடன் இணைந்து நடித்து நேரடியாக ஓடிடியில் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது.

இப்படத்தை திரையரங்குகளில் கொண்டு வருவதில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும், ஃபேன்டஸி, நகைச்சுவை, உணர்வு மற்றும் பிரம்மாண்டமான கதைசொல்லல் முறையில் ரசிகர்களிடம் வலுவாகச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Sundar C to direct a fantasy film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments