கூச முனுசாமி வீரப்பன் சீசன் - 2 டீசர்!
கூச முனுசாமி வீரப்பன் சீசன் - 2 டீசர் வெளியானது...
வீரப்பன் குறித்த ஆவணத் தொடரான கூச முனுசாமி வீரப்பன் சீசன் - 2 டீசர் வெளியாகியுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணத் தொடர் கடந்த 2023 ஆண்டு வெளியானது. வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மற்றும் அவரது குழுவின் மேற்பார்வையில் இத்தொடர் உருவாகியுள்ளது.
ஆர். வி. பிரபாவதி தயாரிப்பில் சரத் ஜோதி இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம் 2023, டிச.14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி பரபலான கவனத்தைப் பெற்றதுடன் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. காரணம், இதுவரை வெளியாகாத வீரப்பன் நேர்காணல் விடியோக்கள் இதில் இடம்பெற்றிருந்தன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பலரும் ஆவலுடன் காத்திருந்த இத்தொடரின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், மறைந்த நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் எப்படி கடத்தினார்; கடத்தலுக்குப் பின் நடந்த சம்பவங்கள் என்னென்ன என்பது குறித்த வெளிவராத விடியோ, புகைப்படங்கள் இருக்கலாம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
The teaser for Koose Munisamy Veerappan Season 2, a documentary series about Veerappan, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.