FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராஜன் வகையரா படப்பிடிப்பு புகைப்படத்தைப் பகிர்ந்த கென் கருணாஸ்!

நடிகர் கென் கருணாஸ் பகிர்ந்த ராஜன் வகையரா படப்பிடிப்பு புகைப்படம் குறித்து...

4 செப்டம்பர் 2026, 12:29 pm IST
ராஜன் வகையரா படப்பிடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் உடன் நடிகர் கென் கருணாஸ். - படம்: இன்ஸ்டா / கென் கருணாஸ்.
பகிர்:

நடிகர் கென் கருணாஸ் நடிக்கும் தனது ராஜன் வகையரா திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ராஜன் வகையறா என்கிற திரைப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இதில், வடசென்னையின் அமீர் கதாபாத்திரத்தின் இளவயது வாழ்க்கையில் நடிகர் கென் நடித்து வருகிறார்.

தற்போது வெற்றிமாறன் அரசன் என்ற படத்தை சிம்புவை வைத்தி இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகு ராஜன் வகையறா படத்தை இயக்குகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

Advertisement

Advertisement

இந்த ராஜன் வகையறா படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியானது. வட சென்னைக்கு சந்தோஷ் நாராயணன், அரசன் படத்துக்கு அனிருத் இசையமைப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் பிறந்த நாளுக்கு நடிகர் கென் கருணாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ராஜன் வகையறா படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அசுரன் படத்தில் தனுஷ் மகனாக நடித்த கென் கருணாஸ் யூத் என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது, மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

summary

Ken Karunaas and VetriMaaran from the sets of Rajan Vagaiyara

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments