FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மகனுக்காக பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த ஜாய் கிரிசில்டா!

ஆடை வடிமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை...

5 செப்டம்பர் 2026, 4:12 pm IST
தன் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ், மகனுடன் ஜாய் கிரிசில்டா
பகிர்:

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன் மகனுக்காக பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளார்.

சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கடந்தாண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அது தன் குழந்தை இல்லை என ரங்கராஜ் கூற, பிரச்னை தீவிரமானது. தொடர்ந்து, டிஎன்ஏ பரிசோதனையில் அக்குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தந்தை என நிரூபணமானது.

தற்போது, மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டாவையும் அவரது மகனையும் ஏற்றுக்கொண்டார். அண்மையில், ஜாய் கிரிசில்டாவுடன் சேர்ந்து மகன் ராகா ரங்கராஜுக்கு மொட்டியடித்தார். மேலும், மகனின் எதிர்காலத்தைக் கவனிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, ஜாய் கிரிசில்டா பிக்பாஸ் தொடரில் பங்கேற்கிறார் எனத் தகவல் வெளியானது. தற்போது, அதுகுறித்து பேசிய ஜாய் கிரிசில்டா, “என் மகனைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் சீசன் 10 வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை குழந்தைக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Fashion designer Joy Griselda has revealed that she turned down an opportunity to participate in Bigg Boss for the sake of her son.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments