FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

என் மகனுக்குத் துணையாக நிற்பேன்: மாதம்பட்டி ரங்கராஜ்

தன் மகன் ராகா குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை...

Updated On : 30 ஜூலை 2026, 3:39 pm IST
தன் மகனுடன் மாதம்பட்டி ரங்கராஜ்
பகிர்:

தொழிலதிபர், நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தன் மகனுக்குத் துணையாக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கடந்தாண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அது தன் குழந்தை இல்லை என ரங்கராஜ் கூற, பிரச்னை தீவிரமானது. தொடர்ந்து, டிஎன்ஏ பரிசோதனையில் அக்குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தந்தை என நிரூபணமானது.

மேலும், இந்த விவகாரம் குறித்து ஜாய் கிரிசில்டா தொடர்ந்து பதிவுகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். பின், இருவரும் சுமூகமான முடிவை எட்டியதாகத் தெரிகிறது. அதனால், மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பேசுவதை ஜாய் கிரிசில்டா குறைத்துக்கொண்டார். மேலும், தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என்றும் பெயரிட்டதைத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாகச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழுப் பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன்.

இனி, என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழுப் பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Businessman and actor Madhampatti Rangaraj has stated that he will stand by his son.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments