FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அன்பில் அவன் படத்தில் வெளியீட்டுத் தேதி நாளை அறிவிப்பு!

அன்பில் அவன் படத்தில் வெளியீட்டுத் தேதி நாளை வெளியாகவுள்ளது குறித்து...

7 செப்டம்பர் 2026, 10:02 pm IST
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் - படங்கள்: எக்ஸ் / திங்க் மியூசிக் இந்தியா.
பகிர்:

அன்பில் அவன் படத்தில் வெளியீட்டுத் தேதி நாளை (செப். 7) அறிவிக்கப்படவுள்ளது.

அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.

ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார்.

Advertisement

Advertisement

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

முன்னதாக, இந்தப் படம் செப்டம்பரில் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாட உரிமைகளை ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

summary

An update regarding the release date of the movie Anbe Avan will be released tomorrow (Sept. 7).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments