FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஷண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் ஷண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

7 செப்டம்பர் 2026, 7:02 pm IST
நடிகர் சண்முக பாண்டியன் - கோப்புப் படம்
பகிர்:

நடிகர் ஷண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயரை படக்குழு திங்கள்கிழமை (செப். 7) அறிவித்துள்ளது.

மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகனான ஷண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படை தலைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதைத் தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த கொம்புசீவி திரைப்படமும் பெரியளவில் கவனம் பெறவில்லை.

Advertisement

Advertisement

ஷண்முக பாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், அந்தப் படத்துக்கு “கிங் அண்ட் குயின்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை எல்.கே. சுதீஷ் தயாரிக்க, இயக்குநர் மணி சியோன் இயக்குகிறார். மேலும், இந்தப் படத்துக்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The film crew announced the title of the new movie starring actor Shanmuga Pandian on Monday (Sept. 7).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments