ராம் பொதினேனி இயக்கத்தில் நடிக்கும் சம்யுக்தா மேனன்!
நடிகர் ராம் பொதினேனி இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிகை சம்யுக்தா மேனன் இணைந்தது குறித்து...
பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி இயக்குநராக அறிமுகமாகும் தனது ’ராபோ23’ திரைப்படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. தமிழில் களரி படத்தில் அறிமுகமாயிருந்தார்.
தெலுங்கில் 2022இல் அறிமுகமான சம்யுக்தாவின் விரூபாக்ஷா திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது. இவர் சமீபத்தில் பெண்களுக்காக ‘ஆதி சக்தி’ என்ற அமைப்பை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
நான்கு படங்களில் பிஸியாக நடித்துவரும் சம்யுக்தா மேனன் தற்போது அவரது பிறந்த நாளில் ராம் பொதினேனி இயக்கத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தை இயக்கிவரும் ராம் பொதினேனி அவரே ’வீரா’ என்ற கதாபாத்திரத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். இந்தப் படத்தை ராபோ சினிமாடிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் சாம் சிஎஸ் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Samyuktha Menon to star in a film directed by Ram Pothineni!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.