FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மீசைய முறுக்கு - 2 டிரைலர் வெளியானது!

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுக்கு - 2 படத்தின் டிரைலர் வெளியானது!

12 செப்டம்பர் 2026, 7:38 pm IST
ஆதி
பகிர்:

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுக்கு - 2 படத்தின் டிரைலர் வெளியானது!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’மீசைய முறுக்கு’. அப்படத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களில் ஆதி நாயகனாக நடித்தார்.

இந்த நிலையில், நடிகை குஷ்புவின் அவ்னி மூவீஸ் தயாரிப்பில் மீசைய முறுக்கு படத்தின் இரண்டாவது பாகமான மீசைய முறுக்கு - 2 படத்தை ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இப்படத்தில் கேத்திகா ஷர்மா, சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஆரா 10/10, கோய்ந்தம்மா போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே பெரியளவில் ஹிட் அடித்துள்ளன.

இந்த நிலையில், மீசைய முறுக்கு - 2 படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இசைக்கலைஞர்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அப்பா - மகன் கதாபாத்திரங்களில் ஆதி நடித்துள்ளதாகத் தெரிகிறது.

மீசைய முறுக்கு - 2 திரைப்படம் வருகிற செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

summary

The trailer of the movie Meesaya Murukku - 2 starring Hip Hop Tamizha Aadhi has been released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments