FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டாக்ஸிக் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

டாக்ஸிக் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

21 செப்டம்பர் 2026, 7:02 pm IST
டாக்ஸிக் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திர போஸ்டர். - படம்: எக்ஸ் / கேவிஎன் புரடக்‌ஷன்ஸ்.
பகிர்:

டாக்ஸிக் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேவிஎன் புரடக்‌ஷன் தயாரிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கடந்த ஆக. 26 ஆம் தேதி டாக்ஸிக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, டாரா சுதாரியா, ருக்மணி வசந்த் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில் அபினே வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கும் ரயா என்ற கேங்ஸ்டர் பாத்திரத்தில் நடிகர் யஷ் நடித்துள்ளார். கங்கா என்ற காதாபாத்திரத்தில் யஷ்ஷின் சகோதரியாக நயன் தாரா நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு மோசமான விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் உலகளவில் ரூ. 350 கோடி வசூல் செய்தது. ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கல் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்த நிலையில், டாக்ஸிக் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வரும் செப். 25 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

The OTT release date for the movie Toxic has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments