FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிக் பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார்! போட்டியாளரா? ப்ரோமோவுக்கு மட்டுமா?

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி முன்னோட்ட விடியோவில் வனிதா விஜயகுமார் இடம்பெற்றுள்ளது குறித்து...

27 செப்டம்பர் 2026, 5:18 pm IST
வனிதா விஜயகுமார் - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் இருக்கும் விடியோ வெளியாகியுள்ளது. இதில், வெளியேறிய போட்டியாளர்களில் 3 பேர் உள்ளே வரவுள்ளதாகவும், அவர்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை வெளியேற்றலாம் எனவும் வனிதா விஜயகுமார் கூறுகிறார்.

இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இல்லாமல், ப்ரோமோ விளம்பரத்துக்காக வந்திருக்கலாம் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் போட்டியாளராகக் கலந்துகொண்டார். இவர் போட்டியாளராக இருந்த சீசனில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் வெகுவாகப் பிரபலமடைந்தார்.

Advertisement

Advertisement

தற்போது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சிக்காக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இதில் கோடாங்கி வேடமணிந்து வனிதா பங்கேற்றுள்ளார்.

அவர் பேசும்போது, 3 வார முடிவுல 3 முக்கிய சம்பவம் நடந்தது என்றும், மூலைக்கு மூலை இருக்கும் கேமராவால் 3 பேருக்கு கண்டம் இருப்பதாகவும் கூறுகிறார்.

வெளியேறிய 3 பேர் உள்ளே வரவுள்ளதாகவும், உள்ளே இருக்கும் 3 பேருடன் அவர்கள் ஒட்டிக்கொள்வதாகவும் குறிப்பிடுகிறார். ஒட்டிக்கொண்டவர்கள் வெட்டிக்கொண்டால், வெட்டிக்கொண்ட ஆள், வெளியேற வேண்டும் எனவும் கூறுகிறார்.

இதனால், இந்த வார இறுதியில் 3 பேர் வெளியேற வாய்ப்புள்ளதையும் வனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

வனிதா விஜயகுமாரின் இந்த புரோமோவைத் தொடர்ந்து, லட்சுமி பிரியா, ஜாவேத், சவின்யா ஆகிய 3 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.

இதனால், லீடர் நாமினேஷனால் வெளியேற்றப்பட்ட இவர்கள் மூவரும் பிக் பாஸ் போட்டியில் நீடிக்க, வீட்டில் இருக்கும் மற்ற மூவருடன் போட்டி போட உள்ளனர். இப்போட்டியின் முடிவில் தோல்வியடைந்த நபர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

லீடர் நாமினேஷனில் வெளியேறிய லட்சுமி பிரியா, ஜாவேத், சவின்யாவுக்கு நிகழ்ச்சியில் தொடர்வதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால் நிகழ்ச்சியில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

summary

Bigg boss 10 tamil update Vanitha Vijayakumar in the Bigg Boss house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments