FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மீசைய முறுக்கு - 2, டோரதி வசூல் எவ்வளவு?

மீசைய முறுக்கு - 2, டோரதி திரைப்படங்களின் 2 நாள் வசூல்....

27 செப்டம்பர் 2026, 11:24 am IST
பகிர்:

நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவான மீசைய முறுக்கு மற்றும் கார்த்திக் சுப்புராஜின் டோரதி வசூல்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணியில் உருவான டோரதி திரைப்படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பாலின அடையாளங்களையும் அதனைச் சமூகம் எதிர்கொள்ளும் விதத்தையும் மையப்படுத்தி உருவாகியுள்ளது.

அதே நேரம், இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான மீசைய முறுக்கு - 2 திரைப்படமும் வெள்ளிக்கிழமை டோரதியுடன் வெளியானது. முன்னதாக, மீசைய முறுக்கு - 2 பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்ததால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இரண்டு திரைப்படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வணிக ரீதியாக முன்னேற்றம் கண்டு வருகின்றன. முக்கியமாக, மீசைய முறுக்கு - 2 திரைப்படம் 2 நாள் வசூலாக ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். மேலும், டோரதி திரைப்படமும் ரூ. 2 கோடி வரை வசூலித்து கவனம் பெற்று வருகிறது.

Information regarding the box-office collections of Meesaya Murukku (starring Hip Hop Adhi) and Karthik Subbaraj's Dorothy has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments