ஜெயிலர் - 2 இசை வெளியீடு அறிவிப்பு!
ஜெயிலர் - 2 இசை வெளியீடு குறித்து...
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அக். 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான, புரமோஷன்களும் திட்டமிட்டு வருகின்றன.
முன்னதாக, நடிகர்கள் வித்யா பாலன், எஸ்ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் கதாபாத்திர அறிமுக விடியோக்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அதேபோல், முதல் பாடல அல்ல போலலோ பாடல் ரசிக்க வைத்தது. தொடர்ந்து, ஒன் மூன் பாடலும் வெளியாகி கேட்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் அனைத்து பாடல்களையும் செப். 30 ஆம் தேதி இசையமைப்பாளர் அனிருத் இசைக்கச்சேரி போல் நடத்தி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசி திரைப்படத்திற்கு செய்தது போல், குறைவான ரசிகர்களை வைத்து மேடையில் அனைத்து பாடல்களையும் பாட உள்ளனர். இதனால், இசை வெளியீட்டு விழா போல் ஜெயிலர் - 2க்கு நடக்காது என்றே தெரிகிறது. இதன் காரணமாக, நடிகர் ரஜினிகாத்தின் பேச்சும் இருக்காது என்பதால் ரசிகர்கள் வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
An announcement has been made regarding the music launch of the movie Jailer 2.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.