மீண்டும் அப்படி நடிக்க மாட்டேன்: அமலா பால்
ஆடை திரைப்படம் குறித்து அமலா பால் ...
நடிகை அமலா பால் ஆடை திரைப்படம் குறித்து பேசியுள்ள விஷயம் கவனம் பெற்றுள்ளது.
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.
தொடர்ந்து, தன் காதலர் ஜகத் தேசாயைத் திருமணம் செய்துகொண்டார். இந்த இணைக்கு ஆண் குழந்தையும் உள்ளது. இறுதியாக, அமலா பால் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம், லெவல் கிராஸ் திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றிருந்தன. இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய அமலா பால், “ஆடை திரைப்படத்தின் கதையில் தேவை ஏற்பட்டதால் ஆடையில்லாமல் நடிக்க வேண்டும் எனச் சொன்னார்கள். முதலில் இயக்குநரையும் ஒளிப்பதிவாளரையும் நம்புவதற்கு கொஞ்ச நாள்கள் ஆனது. காரணம், இப்படத்தை வெறும் நிர்வாணத்திற்காக எடுக்கிறார்களா? இல்லை, அதன்பின் இருக்கும் உணர்வைச் சொல்கிறார்களா என்கிற குழப்பம் இருந்தது.
ஒருகட்டத்தில், ஒரே மாதிரியாக ஏன் நடிக்க வேண்டும் என நம்பிக்கை ஏற்பட்டதும் நிர்வாணக் காட்சிகளில் நடித்தேன். படப்பிடிப்பில் மிகக் குறைவான நபர்களுடனே அது காட்சிப்படுத்தப்பட்டது. அப்படக்குழுவினர் என்னைச் சிறப்பாக கையாண்டனர். ஆனால், இப்போது இருக்கும் புரிதலுக்கு மீண்டும் ஆடை போன்ற கதையில் அப்படி நடிக்கச் சொன்னால் மறுத்துவிடுவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Actress Amala Paul's remarks regarding the movie Aadai have garnered attention.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.