FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்வர் விஜய் சிக்மா திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்: சந்தீப் கிஷன்

சிக்மா திரைப்படம் குறித்து சந்தீப் கிஷன்...

ஜேசன் விஜய், சந்தீப் கிஷன்
பகிர்:

நடிகர் சந்தீப் கிஷன் சிக்மா திரைப்படத்தை முதல்வர் பார்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாக நடித்துள்ளார்.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சந்தீப் கிஷன், “இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல் திரைப்படம் போல் இல்லாமல் நேர்த்தியான பெருமைப்படும் படமாக சிக்மாவை இயக்கியுள்ளார். இப்படத்தை முதல்வர் விஜய் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். யார்தான் ஆசைப்படமால் இருப்பார்கள்? ஆக்‌ஷன் மட்டுமல்லாமல் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Sundeep Kishan has requested that the Chief Minister watch the movie Sigma.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments