ரஜினி சாருடன் நடிப்பதே மகிழ்ச்சியானது: சிவராஜ்குமார்
ஜெயிலர் - 2 திரைப்படம் குறித்து சிவராஜ்குமார் பேச்சு....
நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் - 2 திரைப்பட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அக். 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான, புரமோஷன்களும் திட்டமிட்டு வருகின்றன.
இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இன்று (செப். 30) இசையமைப்பாளர் அனிருத் இசைக் கச்சேரி போல் நடத்தி வெளியிட உள்ளார். இத்திரைப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றிருப்பதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் சிவராஜ்குமார், “ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்துள்ளேன். பெரிய கதாபாத்திரம் இல்லையென்றாலும் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன். ரஜினி சாருடன் மீண்டும் இணைந்து நடித்தது மகிழ்ச்சியானது. அவர் பகிரும் அனுபவங்கள், என் அப்பாவைக் குறித்து பேசும் விஷயங்கள் எல்லாம் நெகிழ்ச்சியானவை. அவர் மிகச்சிறந்த மனிதர்.” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Shiva Rajkumar has shared his experiences regarding the movie Jailer 2.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.