முகப்பு
திரை விமரிசனம்

சிபி சத்யராஜின் 'மாயோன்' - படம் எப்படி இருக்கிறது?

இளையராஜா இசையில் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மாயோன் திரைப்படத்தின் விமர்சனம்  

Updated On : 24 ஜூன் 2022, 11:39 am IST
பகிர்:

இளையராஜா இசையில் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மாயோன் திரைப்படத்தின் விமர்சனம்  

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரிஷ் பேரடி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் மாயோன். டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பாக அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். கிஷோர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 

தொல்லியல் துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் கல்வெட்டுக்களை ஆராய செல்கின்றது குழு ஒன்று. கோவிலின் ரகசிய அறையில் புதையல் இருப்பது அந்தக் குழுவுக்கு தெரிய வருகிறது. அந்தக் கோவிலில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும், இரவு அந்தக் கோவிலில் இருப்பவர்களுக்கு ஆபத்து எனவும் அந்த ஊர் மக்களிடையே நம்பிக்கை இருந்துவருகிறது. இந்த நிலையில் தொல்லியல் துறையினர் கோவிலிலிருந்த கல்வெட்டுக்களை எப்படி மீட்கிறார்கள் என்பதே மாயோன் படத்தின் கதை. 

Advertisement

Advertisement

படத்தில் முன் கதைகளை சொல்லும்போது பொம்மலாட்ட முறையில் சொன்னவிதம் நன்றாக இருந்தது. அமானுஷ்யமான நிகழ்வுகள் படத்தில் அடிக்கடிவருகின்றன. சிஜி காட்சிகளுக்கு கூடுதல் மெனக்கெட்டிருக்கலாம். நடிகர்களின் நடிப்பு, காட்சி உருவாக்கம், ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சுமார்.

படத்தின் இயக்குநர் கிஷோரின் பெயர் தொழில்நுட்பக் கலைஞர்களின் வரிசையில் வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தான் இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார். அவரது பெயர் படத்தில் பிரதானமாக காட்டப்படுகிறது. இயக்குநர் கிஷோர் தனது மோசமான இயக்கத்தின் தரத்தினால் அப்படி ஒதுக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. இந்தப் படத்தின் தரம்தான் இவற்றை யோசிக்க வைக்கிறது. 

பொதுவாக இளையராஜாவின் பின்னணி இசை குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் இந்தப் படத்தில் அவரது பின்னணி இசையும் சேர்ந்து நம்மை சோதிக்கிறது. சிஜி முறையில் உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதை, பாம்பு மற்றும் அனிமேட்டட் காட்சிகள் இரண்டாம் பாதியை முழுக்க ஆக்கிரமித்திருக்கின்றன. ஆனால் அவற்றின் தரம் குறைவாக இருப்பதால் படத்தின் சுவாரசியம் குறைகிறது. 

படத்தின் முதல் பாதி பெரும் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. காட்சிகளையும் முன்கூட்டியே கணிக்க முடிகிறது. இதனால் படம் தரவேண்டிய எந்த உணர்வையும் தராமல் நம் பொறுமையை மிக சோதிக்கிறது. மொத்தத்தில் வலுவற்ற திரைக்கதை மற்றும் மோசமாக படமாக்கப்பட்டவிதத்தால் இந்த மாயோன் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments