முகப்பு
ஸ்பெஷல்

விஜய், நல்ல நடிகர் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு நல்ல தலைவன், நல்ல மனிதனும்கூட!

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... ரசிகனை ரசிக்கும் தலைவன் விஜய்யைப் பற்றி...

Updated On : 19 ஜூன் 2026, 9:03 pm IST
நலத் திட்ட உதவிகள் வழங்கிய விஜய். - (தினமணி கருவூலத்திலிருந்து...)
பகிர்:

தன் மகிழ்ச்சியான தருணங்களை மக்களுடனும், தன் ரசிகர்களுடனும் பகிர்ந்து கொள்வதில் விஜய்க்கு எப்போதுமே இரட்டை மகிழ்ச்சிதான் அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அதில் சில உதாரணங்கள்.

தனக்கு வாழ்வளித்த ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம், தன் திருமண வரவேற்பை தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 60 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடத்தினார் விஜய். இது தமிழ்த் திரையுலகில் இதுவரை எந்த நடிகரும் மேற்கொள்ளாத ஒரு நடைமுறை சமீபத்தில்கூட 'போக்கிரி' படத்தின் வெற்றி விழாவையும், தன் பிறந்தநாள் விழாவையும் ஆயிரக்கணக்கான ரசிகர்களோடு கொண்டாடி மகிழ்ந்தார். ரசிகர்களோடு மட்டுமே விஜய் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில்லை. பொதுமக்களுடனும் பகிர்ந்து கொள்வதை நடைமுறையில் வைத்திருக்கிறார்.

'குஷி' படத்தின் 150-வது நாள் அன்று மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த 40 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தவர். தன் 33-வது பிறந்த நாளன்று தான் பிறந்த சென்னை இராயப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 80 குழந்தைகளுக்கும் அதேபோல் மோதிரங்களை அணிவித்து மகிழ்ந்தார்.

Advertisement

Advertisement

மோதிரம் பெற்ற ஒரு குழந்தையின் தாய், “என் தாலிக்குக்கூட தங்கம் கிடைக்கலை. ஆனா என் குழந்தைக்கு பிறந்த அன்னைக்கே தங்கம் கிடைச்சிருக்கு” என்று விஜய்யிடம் கூறியது எல்லோரையும் நெகிழ வைத்தது.

அப்படி நெகிழ்ந்து போன ஒரு கோயம்புத்தூர் ரசிகர் தலைவன் வழியில் தானும் ஏழைக் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தது எல்லாவற்றிற்கும் ஹைலைட்டாக அமைந்தது.

இதேபோன்று போக்கிரி' பட வெற்றி தந்த மகிழ்ச்சியையும் மதுரையில் 9 பெண்களுக்கு பசுக்களை தானம் வழங்கிக்கொண்டாடினார் விஜய். 'நடிகர்களில் முதன்முதலில் பசுதானம் வழங்கியவர் விஜய்தான்! என்று பெருமைப்படுகிறார்கள் விஜய் ரசிகர்கள். மேலும், தீபாவளி உள்ளிட்ட ஒவ்வொரு கொண்டாட்டத்தையும் ஆட்டோக்காரர்களின் குடும்பங்களோடும். அனாதை ஆசிரமக் குழந்தைகளோடும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வித்து மகிழ்கிறார் விஜய்.

இப்படி வெளியில் தெரிந்து விஜய் செய்த உதவிகள் அதிகம் என்றாலும் ரகசியமாய் அவர் செய்துவரும் உதவிகளும் பல இருக்கின்றன என்கின்றனர் விஜய் ரசிகர்கள். பெண்ணாகரம் கோயில் கிரிவலப்பாதையை விளக்குகளால் அலங்கரித்துக் கொடுத்தது. விருது நகரில் முதியோர்களுக்காக இலவச இல்லம் கட்டிக்கொடுத்தது, மணப்பாடு என்கிற ஊரில் ஏழைக் குழந்தைகளுக்காக விடுதி கட்டிக்கொடுத்தது என்று நீள்கிறது விஜய்யின் ரகசிய உதவிகளின் பட்டியல்.

சரி! சில உதவிகளை ஏன் விஜய் பத்திரிகைகள் மூலம் தெரியப்படுத்துகிறார் என்று கேட்டால் அவர் அப்படிச் செய்வதால்தான் அது அடிமட்ட ரசிகர்கள் வரை போய் சேர்ந்து அவர்களும் உதவி செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தால் தூண்டப்படுகிறார்கள். பல ஏழை மக்களும் பயனடைகிறார்கள்!" என்று பதில் தெரிவிக்கின்றனர் விஜய் ரசிகர்கள். சரி விஜய்யின் எண்ணங்களை எந்த அளவுக்குச் செயல்படுத்தி வருகிறார்கள் விஜய் மன்றத்தினர்.

அமைதிப் படை!

தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே! என்பார்கள், விஜய் ரசிகர்களும் அப்படித்தான் விஜய்யை போலவே ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காக்கிறார்கள். அதேநேரத்தில் தலைமை 'எள்' என்றால் எண்ணெய்யாக நிற்கும் அவர்கள் விஜய்யின் நற்பணிப் பாதையில் அப்படியே வழுவாமல் நடந்து வருகிறார்கள்.

இதுவரை அன்னதானம், நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல் போன்ற சிறுசிறு நற்பணிகளை மக்களுக்குச் செய்துவந்த விஜய் மன்றத்தினர், தற்போது நிழற்குடைகள் அமைப்பது வரை முன்னேறி உச்சக்கட்ட மாக சமீபத்தில் ஒசூரில் ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக் கூடத்தையே தங்கள் சொந்த செலவில் கட்டிக்கொடுத்து ஆச்சர்ய பூங்கொத்துகளை அள்ளி இருக்கின்றனர்.

விஜய்யின் நற்பணிக் கூட்டங்கள் ஒவ்வொன்றும் மிகச்சிறப்பாக நடக்க களப்பணிகளில் சுற்றிச் சுழல்கின்றனர் விஜய் ரசிகர்கள். அதேபோன்று ரசிகர்கள் நடத்தும் நற்பணி விழாக்களிலும் விஜய் கலந்துகொண்டு ரசிகர்களை இப்படி ஊக்கப்படுத்துகிறார்.

எல்லா நற்பணிகளிலும் விஜய் முதல் அவரது கடைக்கோடி ரசிகன் வரை எல்லோருடைய பங்கும் நிறைந்திருப்பதால் கட்டுக்கோப்பான ராணுவம் போன்று செயல்படுகின்றன விஜய் மன்றங்கள். ஆக, மக்களுக்கு பொழுதுபோக்கைத் தரும் நடிகனாக மட்டுமே நில்லாமல், அவர்களுக்கு நன்மை செய்து, தன்னைச் சார்ந்தவர்களையும் நன்மை செய்யத் தூண்டிய வகையில் ஒரு நல்ல நடிகனாக மட்டும் ஒளிரவில்லை விஜய். மாறாக, தன் ரசிகர்களுக்கு ஒரு நல்ல தலைவனாகவும், தமிழ் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதனாகவும் ஒளிர்கிறார்.

[2008 டிச. 16 ஆம் தேதியிட்ட சினிமா எக்ஸ்பிரஸ் இதழின் பக்கத்திலிருந்து...]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments