முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

பொறியியல் கலந்தாய்வு! ரேண்டம் எண் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

பொறியியல் கலந்தாய்வில் மாணவர்களுக்கான ரேண்டம் எண் முக்கியத்துவம் பெறுவது பற்றி..

Updated On : 10 ஜூன் 2026, 5:03 pm IST
பொறியியல் கலந்தாய்வு - file photo
பகிர்:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) இன்று வெளியாகிறது.

TNEA இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை அறிந்து கொள்ளலாம்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான ரேண்டம் இன்று வெளியிடப்படுகிறது. இந்த ரேண்டம் எண் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள் என்பதே இதன் மிகப்பெரிய முக்கியத்துவம் ஆகும்.

Advertisement

Advertisement

ஒரே மதிப்பெண் எடுத்த மாணவர்களை தகுதிநிலை அடிப்படையாக வைத்து சமநிலைப்படுத்தும் வகையில் இந்த ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர் என்பதால், மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.