எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்!
எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி...
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நடத்தும் அலுவரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 8-வது முறையாக போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் சாலைவலம் மேற்கொண்டுள்ளார்.
ADMK General Secratary Edappadi Palaniswami Files Nomination!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.