FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல்!

பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி...

Updated On : 30 மார்ச் 2026, 12:24 pm IST
பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் - PTI
பகிர்:

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது.

இந்த நிலையில், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய், வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

Advertisement

Advertisement

அவருக்கு மாற்று வேட்பாளராக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனு தாக்கலின்போது, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உடனிருந்தனர்.

இதனிடையே, திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிடவுள்ள தவெக தலைவர் விஜய், வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தவெக தேர்தல் பிரசார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

summary

TVK Leader Vijay Files Nomination in Perambur!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments