FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கப்பல் பணிமனையில் 318 பயிற்சிப் பணிகள்

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான மும்பை நேவல் டாக்யார்டில் தற்போது 318 ‘அப்ரண்டிஸ் டிரெயினி’ பயிற்சிப்

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான மும்பை நேவல் டாக்யார்டில் தற்போது 318 ‘அப்ரண்டிஸ் டிரெயினி’ பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும். 

பயிற்சி: அப்ரண்டிஸ் டிரெயினி

காலியிடங்கள்: 318

Advertisement

Advertisement

தகுதி: பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், பிளம்பர், மாசன், மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், பெயிண்டர், பவர் எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரோபிளேட்டர், பவுண்டரி மேன், பைப் பிட்டர், ஷிப்ரைட், கிரேன் ஆபரேட்டர், ரிகர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.04.1999 மற்றும் 31.03.2006 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் படைப்பிரிவு பணியாளர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

உடற்தகுதி: குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனும், பார்வைத்திறன் 6/6 முதல் 6/9 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.bhartiseva.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bhartiseva.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments