முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.63,200 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையில் இந்திய அஞ்சல் துறையின் மெயில் மோட்டார் சர்வீல் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட் 2024, 12:45 pm IST
இந்திய அஞ்சல் துறை
பகிர்:

சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறையின் மெயில் மோட்டார் சர்வீல் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Skilled Artisans

காலியிடங்கள்: 10

Advertisement

Advertisement

டிரேடு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. M.V. Mechanic - 4

2. M.V. Electrician - 1

3. Tyre Man - 1

4. Blacksmith - 3

5. Carpenter - 1

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். எம்வி மெக்கானிக் பாடப்பிரிவிற்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்ச தகுதியான 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடம், நாள், பாடத்திட்ட விவரம் தேர்வு நுழைவுச்சீட்டு மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. கட்டணத்தை இந்திய அஞ்சல் வில்லையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணபத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அல்லது பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பித்தின் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Senior Manager. Mail Motor Service, No:37, Greams Road, Chennai - 600 006

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.8.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments