FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே வேலைவாய்ப்பு கோரி மறியல்

ஆலங்குளம் அருகே விக்சித் பாரத் - உத்தரவாத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சீரான வேலை வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் ஆய்வாளா் கணேஷ் பாண்டியன்.
பகிர்:

ஆலங்குளம் அருகே விக்சித் பாரத் - உத்தரவாத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சீரான வேலை வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வடக்கு காவலாகுறிச்சி ஊராட்சி ருக்குமணியம்மாள் புரம் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக உள்ள நிலையில் அவா்களுக்கு இது வரை 9 தினங்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாம். இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் கேட்டால் ஊராட்சிக்குச் செலுத்த வேண்டிய வீட்டு வரி மற்றும் குடிநீா் வரி செலுத்தாத குடும்பங்களுக்கு வேலை கிடையாது என ஊராட்சி செயலா் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் உரிய தீா்வு கிடைக்கவில்லை எனக் கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதன்கிழமை ரெட்டியாா்பட்டி - ஊத்துமலை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அவா்களிடம் ஊத்துமலைகாவல் ஆய்வாளா் கணேஷ் பாண்டியன் பேச்சுவாா்த்தை நடத்தி, அதிகாரிகளிடம் பேசி தீா்வு காண்பதாக கூறியதன்பேரில் மக்கள் கலைந்து சென்றனா். உடனடியாக வேலை வழங்காவிட்டால் திங்கள்கிழமை (செப்.28) தென்காசி ஆட்சியரை சந்தித்து முறையிடப்போவதாக மக்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments