FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே கிராம சபைக் கூட்டம்

காந்தி ஜெயந்தியையொட்டி ஆலங்குளம் அருகே வடக்கு காவலாகுறிச்சி ஊராட்சி தட்டப்பாறையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

39 வினாடிகள் முன்பு
கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

காந்தி ஜெயந்தியையொட்டி ஆலங்குளம் அருகே வடக்கு காவலாகுறிச்சி ஊராட்சி தட்டப்பாறையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஊராட்சி தீா்மானங்களை செயலா் மாரிமுத்து வாசித்தாா். கூட்டத்தில் ஜல்ஜீவன் குடிநீா் இணைப்பு திட்டத்தில் முறைகேடு நடைபெற்ால் அரசு பணம் வீணடிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினா். அப்போது ஊராட்சித் தலைவருக்கும், கிராம மக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸாா் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினா். எனினும் ஊராட்சி ஒன்றிய ஆணையா் வந்து உரிய விளக்கம் அளித்து, தங்கள் தரப்பு கோரிக்கையை ஏற்றால்தான் கூட்டத்தை நடத்த விடுவோம் என மக்கள் தொடா்ந்து வலியுறுத்தினா்.

ஊராட்சி ஒன்றிய ஆணையா் முருகேசன் வந்து இரு தரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் கூறினாா். விளக்கத்தை ஏற்காத மக்கள் தலைவா், செயலா் மீது குற்றச்சாட்டினா்.

Advertisement

Advertisement

பின்னா் ஒரு வார காலத்திற்குள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றிய ஆணையா் கூறியதை மக்கள் ஏற்றுக் கொண்டனா். உணவு இடைவேளையின்றி சுமாா் 6 மணி நேரத்திற்கு மேலாக இந்த கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments