FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை

இந்தியாவின் முன்னணி மல்டி-டெக்னாலஜி நிறுவனமான பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கார் ஓட்டுநர் பணி

Updated On : 31 மே 2024, 8:57 am IST
பகிர்:

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியாவின் முன்னணி மல்டி-டெக்னாலஜி நிறுவனமான பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.KP/S/05/2024

பணி: Staff Driver

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.16,900 - 60,650 வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: இலகுரக,கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டாரில் ஏற்படும் திடீரென ஏற்படும் பழுதுகளை சரிசெய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை BEML Limited, Bangalore என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bemlindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழே நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Sr.Manager(Corporate Recruitment), Recruitment Cell, BEML Soudha, No:23/1. 4th main Road, S.R.Nagar, Bangalore-560 027

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர கடைசி நாள்: 5.6.2024

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் அல்லது recruitment@bemilltd.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments