ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!
இந்திய ராணுவ வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கட்டடப் பணியாளர் பணியிடங்கள் குறித்து...
மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் உள்ள கமாரியா இந்திய ராணுவ வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கட்டடப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பிக்கலாம். ஓராண்டு காலத்திற்குரிய இந்த பணியிடமானது, தொழிற்சாலையின் தேவை மற்றும் தனிப்பட்ட செயல்திறனைப் பொறுத்து, பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : 03 / GA/RC/Tenure/DBW/06/2026
பதவியின் பெயர், அடிப்படை ஊதியம் மற்றும் காலியிடங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
Advertisement
Advertisement
பணி: Tenure Based DBW
காலியிடங்கள்: 350 (UR-141, OBC-52, SC-52, ST-70, EWS-35)
சம்பளம் : மாதம் ரூ.19,900 + டிஏ
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Atteridant Operator Chemical Plant (AOCP)ஐடிஐ முடித்து என்ஏசி, என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது Fitter,Turner,Machinist,Sheet Metal Worker,Electrician,Electronic Mechanic, Boiler Attendant, Mechanic Industrial Electronic, A/C Mechanic போன்ற ஏதாவதொரு 'டிரேடில் ஐடிஐ முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28.3.2026 தேதியின்படி 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி உச்ச வயது வரம்பில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் முறை பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ddpdoo.gov.in என்ற இணையதளத்தின் career பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief General Manager (Ordnance Factory), Khamaria, Jabalpur (Dt.), Madhya Pradesh, Pin - 482 005.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 22.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Offline applications are invited from the citizens of India fulfilling the requisite qualification/criteria against the vacancies of Tenure based DBW
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.