FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு

100% வேலை உறுதி அளித்து அதனை நிறைவேற்றத் தவறிய கல்வி நிறுவனம் கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு பற்றி..

23 செப்டம்பர் 2026, 12:20 pm IST
அலுவலகம் - பிரதி படம்
பகிர்:

தங்களது கல்வி நிறுவனத்தில் படித்தால் 100 சதவிகிதம் வேலை வாய்ப்பு உறுதி என்று வாக்குறுதி அளித்து படிப்பில் சேர்த்த பிறகு, அதனை நிறைவேற்றாத நிலையில், கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கவும், இழப்பீடு வழங்கவும் மாவட் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், தனியார் கல்வி நிறுவனத்தில் ரூ.85 ஆயிரம் செலுத்தில் எம்பிஏ சேர்ந்த மாணவருக்கு, சேர்க்கையின்போது வேலை வாய்ப்பு உறுதி என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அது நிறைவேற்றாதபட்சத்தில் அந்த மாணவர் நுகர்வோர் ஆணையத்தில் முறையீடு செய்ததில், அந்த தனியார் நிறுவனம் கல்விக் கட்டணத்தை திரும்ப செலுத்த உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், ரூ.5 ஆயிரம் வழக்கு செலவுக்கான தொகையும் வழங்க உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தான் கடன் பெற்று கட்டணம் செலுத்தியதாகவும் ஆனால், வேலை கிடைக்காததால் கடன் தொல்லைக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மிகப்பெரிய நிறுவனங்களில் மாணவருக்கு பணி வாய்ப்புகள் கிடைத்த போதும், அவர் குருகிராம் அல்லது தில்லியில்தான் பணியாற்றுவேன் என்று கூறியதால்தான் வேலை கிடைக்கவில்லை என்றும் கல்வி நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.

ஆனால், பணம் செலுத்தி சேர்ந்த மாணவருக்கு கல்வி நிறுவனம் அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில், கல்விக் கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது.

summary

100% Job Guarantee! Educational Institution Fails to Deliver – Ordered to Refund Tuition Fees

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments